புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
பாலக்கோட்டில் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
பாலக்கோடு,
கோவில் திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் திருவிழா கடந்த 13-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சக்திகரகம் அழைத்தலும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான நேற்று பாலக்கோடு தாலுகா அலுவலகம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இவர்கள் அக்னி குண்டம் வழியாக புதூர் மாரியம்மன் கோவிலை அடைந்து அங்கு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதேபோல் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
அன்னதானம்
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று பாலக்கோடு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின்போது பாலக்கோடு நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், பக்தர்களுக்கு கூழ், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை(வெள்ளிக் கிழமை) வரை திருவிழா தொடர்ந்து நடக்கிறது. விழாவையொட்டி தினமும் இரவில் பட்டிமன்றம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், இசைகச்சேரி ஆகியவை நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.

Next Story