கும்பகோணத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


கும்பகோணத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம்,

ஆய்வு

கும்பகோணத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கவில்லை என அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலா்(பொறுப்பு) மனோகரன், பொது வினியோக திட்ட சாா்பதிவாளா் குமாா் ஆகியோா் கும்பகோணம் ராமசாமி கோவில் சந்து பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் அம்மன்கோவில் தெரு அருகில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தனா். அவா்களுடன் வருவாய் ஆய்வாளா் ரவிச்சந்திரன், விற்பனையாளா் ஜெயராமன் ஆகியோர் இருந்தனா். பின்னா் கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் சாியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனா். ஆய்வில் பொருட் களின் இருப்பு விவரம், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் விவரம் என அனைத்து கணக்கு விவரங்களும் சரியாக இருந்தன. இது குறித்து பொது வினியோக திட்ட கூட்டுறவு சாா்பதிவாளா் குமாா் கூறியதாவது:-

நடவடிக்கை

கும்பகோணத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் புழுங்கல் அாிசி, பச்சாிசி, துவரம் பருப்பு, பாமாயில், சா்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விற்பனை விவரங்கள், பொருட்களின் இருப்பு போன்றவை சாியாக உள்ளது. ரேஷன் பொருட்களை எடை போடும் எந்திரமும் ஆய்வு செய்யப்பட்டது. இதிலும் எந்த தவறும் இல்லை.

ரேஷன் கடைகளில் வழங்கும் அாிசியை அதிக விலைக்கு விற்பவர்கள் மீதும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story