விஷம் குடித்த மாணவர் சாவு
விஷம் குடித்த மாணவர் சாவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பிலிமிசை கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ் (வயது 19). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு ஐ.டி.ஐ. கல்லூரியில் வெல்டிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சதீஷ் சரிவர படிக்காததால் அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் புது பஸ்நிலையத்தில் வைத்து விஷம் குடித்தார். பின்னர் அங்கிருந்து அரியலூருக்கு சென்ற அவர் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற சதீசின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story