ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் கால் துண்டானது
அரியலூர் அருகே ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவரின் கால் துண்டானது.
அரியலூர்,
பாலிடெக்னிக் மாணவர்
அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் அருண் (வயது 21). இவர், பெரம்பலூர் மாவட்டம் கீழமாத்தூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் ஊரில் இருந்து வெள்ளூர் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் அரியலூருக்கு சென்று பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அருண் நண்பர்களுடன் வெள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிக்னல் காண்பிக்கப்பட்டதால் ரெயில் மெதுவாக அங்கிருந்து புறப்பட்டது. இதையறிந்த அருண் உள்ளிட்டோர் ஓடி வந்து ரெயிலில் ஏற முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருண் தவறி கீழே விழுந்தார். அப்போது ரெயில்நிலைய நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே அவர் சிக்கிக் கொண்டார்.
கால் துண்டானது
இதை பார்த்த ரெயிலில் இருந்த கார்டு உடனடியாக ரெயிலை நிறுத்த என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அருணின் வலது கால் துண்டானதால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி துடித்தார். இதையடுத்து ரெயில் பயணிகள் மற்றும் சக நண்பர்கள் அவரை மீட்டு அதே ரெயிலில் ஏற்றி அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அருண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரியலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story