தொட்டியம் அருகே கணவனுடன் கோவிலுக்கு சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
தொட்டியம் அருகே கணவனுடன் கோவிலுக்கு சென்ற பெண் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த போது அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தார்.
தொட்டியம்,
ஸ்கூட்டரில் புறப்பட்டனர்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்காநகரை சேர்ந்தவர் கணேசன்(வயது62). இவர் அப்பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி(54). இவர்கள் இருவரும் நேற்று திருச்சியில் இருந்து தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு ஸ்கூட்டரில் புறப்பட்டனர். கணேசன் ஸ்கூட்டரை ஓட்டினார்.
திருச்சி-சேலம் சாலையில் முசிறியை அடுத்த திருஈங்கோய்மலை மலைப்பாதை அருகே சென்ற போது சாலையோர மணலில் ஸ்கூட்டர் சிக்கி நிலைதடுமாறி சாலையில் சரிந்து விழுந்தது. அப்போது வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த ஜெயலட்சுமி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த மணல் லாரி ஜெயலட்சுமி தலையில் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கணேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னால் மனைவி பலியாகி கிடப்பதை பார்த்து கணேசன் கதறி அழுதார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
டிரைவர் கைது
இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஆனந்த், ஏட்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவர் தொட்டியம் மணமேட்டை சேர்ந்த மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருஈங்கோய்மலை அருகே மணல் குவாரி இருப்பதால் இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மணல் லாரிகள் சென்று வருகின்றன. சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் மணலை அப்புறப்படுத்தாததால்தான் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

Next Story