போளூர் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
போளூர் அருகே சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போளூர்,
ஏரி தூர்வாரும் பணி
போளூரை அடுத்த மூடையூர் கிராமம் அருகேயுள்ள தாங்கல் ஏரி தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணியில் அந்த பகுதியை சேர்ந்த 260 தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 8 மணி முதல் ஏரி தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
காலை 10 மணி அளவில் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 15 பேர் சாப்பிட வீட்டுக்கு சென்றனர். இதற்கிடையே சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் திடீரென ஏரி தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அந்த சமயம் வீட்டிற்கு சாப்பிட சென்ற 15 பேரும் திரும்பி ஏரிக்கு வந்தனர். இதைக்கண்ட ஆணையாளர் மோகன் பணித்தள பொறுப்பாளர் கல்பனா மற்றும் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு திரும்பிய 15 பேரிடம் விசாரித்தார். அப்போது 15 பேரும் வீட்டிற்கு சாப்பிட சென்றதாக ஆணையாளரிடம் தெரிவித்தனர்.
சாலை மறியல்
இந்த பதிலில் திருப்தி அடையாத ஆணையாளர் மோகன் ஏரி தூர்வாரும் பணி சரியாக நடைபெறவில்லை என்று கூறி வீட்டிற்கு சாப்பிட சென்ற 15 பேர் மற்றும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த 245 பேரும் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி வருகை பதிவேட்டில் 260 பேரும் நேற்று வேலைக்கு வரவில்லை என்று ‘ஆப்சென்ட்’ போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆணையாளர் மோகனை கண்டித்து போளூர் – சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் புவனேஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆணையாளர் மோகனிடம் வேலை செய்த அனைவருக்கும் வருகையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு ஏரி தூர்வாரும் பணிக்கு சென்றனர்.
இந்த சம்பவத்தால் போளூர்–சேத்துப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story