சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடியில் நின்று சென்றது


சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடியில் நின்று சென்றது
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடியில் நின்று சென்றது. இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆம்பூர்,

டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்


சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினமும் டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று முதல் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு காலை 10.05 மணிக்கு வந்து நின்றது.

ரெயில் பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் தன்வீர்அஹமத் தலைமையில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் முகமது முபீன், அ.தி.மு.க. நகர செயலாளர் சதாசிவம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நிசார்அகமது, ரெயில் நிலைய அதிகாரி பூபதி, ஜவகர்பாபு, சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெங்களூருவில் இருந்து...


அதைத் தொடர்ந்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மாலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. மாலை 5 மணி அளவில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

Next Story