‘பேன்சி’ கடையில் பணம்– பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


‘பேன்சி’ கடையில் பணம்– பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில், ‘பேன்சி‘ கடையில் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கன்னியாகுமரி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

‘பேன்சி’ கடை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் பின்புறம் தேவசம் போர்டுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கடை ஒன்றில் கன்னியாகுமரி ஒன்றையால் விளையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ‘பேன்சி’ பொருட்கள்  விற்பனை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும், முருகானந்தம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

திருட்டு

கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து முருகானந்தம் அதிர்ச்சி அடைந்தார். மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6,500  திருடப்பட்டிருந்தது. மேலும் பல பொருட்களும் திருடப்பட்டு இருந்தன.

உடனே அவர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேஜை டிராயர் மற்றும் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வலைவீச்சு

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story