ஒரு அரசு வேலைக்கு 10 ஆயிரம் பேர் போட்டியிடுகிறார்கள் கலெக்டர் தகவல்
நாகர்கோவிலில் நடந்த கல்லூரி மாணவ– மாணவிகளுக்கான வழிகாட்டி பயிற்சியை தொடங்கி வைத்த கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், ஒரு அரசு வேலைக்கு 10 ஆயிரம் பேர் போட்டியிடுகிறார்கள் என்று கூறினார்.
நாகர்கோவில்,
வழிகாட்டி பயிற்சி
குமரி மாவட்டத்தில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவ– மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று நடந்தது.
பயிற்சியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–
குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி பயிலும் மாணவ– மாணவிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி இன்று (நேற்று) நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் 9–ம் வகுப்பு அல்லது 10–ம் வகுப்பு படிக்கும்போது, உயர்கல்வி கற்க, எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் படித்தவர்கள் அதிகமாக வேலை தேடி வெளியே வருகிறார்கள்.
ஒரு இடத்துக்கு 10 ஆயிரம்பேர்
ஆகவே தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமென்றால் மற்றவர்களைவிட நாம் திறமையையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு அரசு வேலைக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகிறார்கள். இவர்களை மீறி நாம் வெற்றிபெற வேண்டுமென்றால் அனைத்து வகைகளிலும் நாம் திறமையாக இருக்க வேண்டும்.
மேலும் வெற்றி பெறும்வரை போட்டித்தேர்வுகளில் மாணவ– மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுகளில் வெற்றிபெற வில்லை என்று மாணவ– மாணவிகள் மனம் உடைந்தோ, தேர்வுகளில் கலந்துகொள்ளாமலோ ஒருபோதும் இருக்க கூடாது. ஒவ்வொரு தேர்வுகளிலும் ஒவ்வொரு அனுபவம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.
மானியம்
மேலும் அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்க மானியங்கள் வழங்கி வருகிறது. தகுதியான நபர்கள் இதனை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவ– மாணவிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.
பயிற்சியில், ஆரல்வாய்மொழி பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி, சுங்கான்கடை பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதி, நாகர்கோவில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆகியவற்றில் இருந்து மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி கையேட்டை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மாணவ– மாணவிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story