கடன் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை கன்னியாகுமரி பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்தவர் அமலதாஸ். இவருடைய மனைவி குணசீலி. இவரும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
அந்த மனுவில் குணசீலி கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீன் தொழில் செய்து வருகிறார். அவர் புதிதாக மீன்பிடி படகு வாங்கியுள்ளதாகவும், அதனால் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி கடந்த 2014–ம் ஆண்டு ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம் என இரண்டு தவணையாக மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை தொழிலில் கிடைக்கும் லாபத்தில் இருந்து திருப்பி தருவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரை நான் கேட்கும் போதெல்லாம் இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று இழுத்தடித்தார். மேலும் என்னைப்போல் பல பேரிடமும் அவர் இதேபோல் கடன் வாங்கி ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைஅறிந்த நான் பணத்தை திருப்பித்தரும்படி கேட்டபோது தரமுடியாது என அவர் கூறியதோடு, மிரட்டவும் செய்கிறார். எனவே அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story