ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு
ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி காஞ்சீ புரத்தில் அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார்.
காஞ்சீபுரம்,
ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டி காஞ்சீ புரத்தில் அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார். தீக்காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொண்டர் தீக்குளிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய காஞ்சீபுரம் பல்லவர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் மூசா (வயது 37). பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர் அ.தி.மு.க.வின் தொண்டர் ஆவார். நேற்று மாலை காஞ்சீபுரம் வணிகர் வீதிக்கு மூசா சென்றார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் 3 முறை அடித்ததை கண்டித்தும் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மக்கள் அதிகம் கூடும் இடமான வணிகர் வீதியில் ஒருவர் தீக்குளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் மூசா மீது எரிந்த தீயை அணைத்து உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story