முதியவர் அடித்துக்கொலை எலக்ட்ரீஷியன் கைது
மோட்டார் சைக்கிள் இடித்ததால் ஏற்பட்ட தகராறில் வங்கி முன் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
ராயபுரம்,
மோட்டார் சைக்கிள் இடித்ததால் ஏற்பட்ட தகராறில் வங்கி முன் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் இடித்தது
சென்னை ராயபுரம் ஆதம் சாகீப் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 69). இவர், நேற்று முன்தினம் மதியம் ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். அவர் வங்கி முன் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது ராயபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் முகமதுஉசேன் (45) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திய போது அருகில் நின்று கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது இடித்தது.
அடித்துக்கொலை
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது உசேன், சுபாஷ்சந்திரபோசை தாக்கி கீழே தள்ளினார். இதில் சுபாஷ்சந்திரபோசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் சந்திரபோஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரீஷியன் முகமது உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story