பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆட மறுத்த வாலிபர் அடித்துக்கொலை நண்பர் கைது
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடனமாட மறுத்த வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடனமாட மறுத்த வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் அங்குஷ்(வயது25). இவர் அந்தேரி ரெயில் நிலையம் அருகே உள்ள லாட்டரி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கேத்தன் உள்ளிட்ட சிலர் நண்பர்கள் ஆனார்கள். சம்பவத்தன்று அங்குஷ் அந்தேரியில் நடந்த நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அங்குஷ், கேத்தன் உள்பட அனைவரும் மது அருந்தினர்.
இதையடுத்து நண்பர்கள் அனைவரும் செல்போனில் பாடல் போட்டு நடனமாடினர். அப்போது அங்குஷ் மட்டும் பாடலுக்கு நடனம் ஆடாமல் இருந்தார். இதையடுத்து கேத்தன், அங்குசையும் நடனமாட வருமாறு கூறினார். ஆனால் அங்குஷ் மறுத்தார்.
தலையில் அடித்தார்இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இவரும் ஒருவரை ஒருவர் தாக்கத்தொடங்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தினர். இந்தநிலையில் கேத்தன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அங்குசின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், படுகாயமடைந்த அங்குஷ் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அங்குஷ் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கேத்தனை கைது செய்தனர்.