ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்ட முன்வரைவு தயாரிப்பது குறித்து முதல்–அமைச்சர் தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை தொடர்ந்து புதுவையிலும் முதன்முதலாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
புதுச்சேரி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை தொடர்ந்து புதுவையிலும் முதன்முதலாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு தடை விதித்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் உத்தரவிட்டார். இதனால் புதுவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாமல் போனது.
இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு சட்ட முன்வரைவு தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், சட்டத்துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story