நாக்பூர் மேயராக பதவி வகித்தபோது பட்னாவிஸ் ஊழலில் ஈடுபட்டார் சிவசேனா குற்றச்சாட்டு
நாக்பூர் மேயராக பதவி வகித்த காலகட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியது.
மும்பை,
நாக்பூர் மேயராக பதவி வகித்த காலகட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியது.
அனில் பரப் பேட்டிசிவசேனா எம்.எல்.சி. அனில் பரப் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசும்போது, தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மேயராக பதவி வகித்த 1997– 2001 காலகட்டத்தில், பல்வேறு வகையான டெண்டர்களை குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்கி, மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அரசால் நியமிக்கப்பட்ட நந்த லால் கமிட்டி விசாரணை அறிக்கையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் நாக்பூரில் ஊழலில் திளைத்ததாக தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமின்றி வேறு சில முன்னாள் மேயர்களின் பெயரையும் அனில் பரப் எம்.எல்.சி., அப்போது பட்டியலிட்டார்.
பா.ஜனதா பதிலடிஅவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பாரதீய ஜனதா, இந்த விவகாரத்தில் மும்பை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் எந்தவொரு முகாந்திரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டு சிவசேனா மற்றும் காங்கிரஸ் இடையே ஆன மறைமுகமான புரிதலை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்து உள்ளது.