இருவேறு சம்பவங்களில் ரெயில்வே போலீசாரை தாக்கிய 3 பேர் கைது ஒரு போலீஸ்காரரின் கை முறிந்தது


இருவேறு சம்பவங்களில் ரெயில்வே போலீசாரை தாக்கிய 3 பேர் கைது ஒரு போலீஸ்காரரின் கை முறிந்தது
x
தினத்தந்தி 16 Feb 2017 4:07 AM IST (Updated: 16 Feb 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு சம்பவங்களில் ரெயில்வே போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர் ஒருவரின் கை முறிந்தது.

வசாய்,

இருவேறு சம்பவங்களில் ரெயில்வே போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர் ஒருவரின் கை முறிந்தது.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

பால்கர் மாவட்டம் வசாய் ரெயில் நிலையத்தில் விரார் நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலின் மகளிர் பெட்டியில் ரெயில்வே போலீஸ்காரர் ரோகிதாஸ்(வயது52) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் பெண்கள் பெட்டியில் ஏறினார். இதனை கண்ட போலீஸ்காரர் ரோகிதாஸ் அவரை கீழே இறங்கும் படி எச்சரித்தார். ஆனால் அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் போலீஸ்காரர் ரோகிதாசை தாக்கினார்.

இதில் அவர் காயம் அடைந்தார். ரெயில் விரார் ரெயில் நிலையம் வந்ததும் ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ராகேஷ் காந்த்(30) என்பது தெரியவந்தது.

கை முறிந்தது

நாலச்சோப்ரா ரெயில்வே மேம்பாலத்தில் 3 வாலிபர்கள் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் சூரியகாந்த்(49) அங்கு விரைந்து சென்று வாலிபர்கள் 3 பேரையும் அங்கிருந்து செல்லும் படி எச்சரித்தார். இதில் ஆத்திமடைந்த வாலிபர்கள் சூரியகாந்தை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது கை முறிந்து பலத்த காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மற்ற போலீசார் அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து சூரியகாந்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் கைதானவர்கள் பெயர் ராஜேஷ் ராய்(22), சலீம் சேக்(47) என்பது தெரியவந்தது.


Next Story