அரக்கோணத்தில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து 150 கிலோ சர்க்கரை திருட்டு
அரக்கோணம், 14–வது வார்டு மாணிக்க முதலி தெருவில் ரேஷன் கடை உள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம், 14–வது வார்டு மாணிக்க முதலி தெருவில் ரேஷன் கடை உள்ளது. நேற்று காலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் விற்பனையாளர் அனிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனிதா ரேஷன் கடைக்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ சர்க்கரை, 10 வேட்டி, 10 சேலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அனிதா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில்போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story