மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி சப்–இன்ஸ்பெக்டர் காயம்
நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சேதுராமலிங்கம்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சேதுராமலிங்கம். இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த மினி லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சப்–இன்ஸ்பெக்டர் சேதுராமலிங்கம் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story