எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பதவியேற்பு அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
தென்காசி,
எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்தமிழக முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
தென்காசியில் நகர அ.தி.மு.க.வினர் காசி விசுவநாதசுவாமி கோவில் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். தென்காசி நகர தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன், ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன்ராஜ், இலஞ்சி பேரூர் கழக செயலாளர் மயில்வேலன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ராஜாமுகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலஞ்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை–கடையம்செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில், நகர அவை தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, நகரசபை முன்னாள் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் பஸ் நிலையம், லாலாகடை முக்கு ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி சண்முகவேல், தாய்க்குலம் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாங்குநேரி பஜாரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.