விவசாயிகளின் நலனை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
விவசாயிகளின் நலனை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
விவசாயிகளின் நலனை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
விவசாயிகள் நலனை காக்க...முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று பட்ஜெட் தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சித்தராமையாவிடம் கொடுத்தனர். அப்போது சித்தராமையா பேசியதாவது:–
விவசாயிகளின் நலனை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. இன்றைய சூழலில் விவசாயிகள் கடுமையான கஷ்டத்தில் உள்ளனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். இதற்காக எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்த சில முக்கியமான திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.
நல்ல வரவேற்புமாநில அரசு செயல்படுத்தியுள்ள ‘கிருஷி பாக்ய‘ திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பசுமை வீடுகளுக்கு அதிக தேவை எழுந்துள்ளது. இதுவரை 2,400 பசுமை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும், அவற்றுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சந்தைகளில் ஆன்–லைன் மூலமாக வர்த்தக நடைமுறையை அமல்படுத்தியுள்ளோம்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த நடைமுறையை ஆய்வு செய்துள்ளனர். 156 சந்தைகளில் ஆன்–லைன் மூலம் உணவு தானியங்களை ஏலம் விடும் வசதி உள்ளது. மோசடி, ஏமாற்றுவது போன்றவை குறையும். போட்டி உண்டாவதால் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
சொட்டு நீர்ப்பாசனம்விலை குறைந்ததால் துவரம் பருப்புக்கு ஆதரவு விலை ரூ.450, நெல்லுக்கும் ரூ.100, வெங்காயத்துக்கு ரூ.624 கொடுத்து கொள்முதல் செய்துள்ளோம். இது மட்டுமின்றி கொப்பரை தேங்காய்க்கு உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்து உள்ளோம். சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு பாசனத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.1,782 கோடி நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளது. ஆனால் வெறும் ரூ.450 கோடி மட்டும் விடுவித்து உள்ளது. பருவமழைக்கு பிறகு பெய்ய வேண்டிய மழை பொய்த்ததால் ரூ.3,310 கோடிக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய குழு கர்நாடகம் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.