2018–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் எதிர்கொள்வோம் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேட்டி


2018–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் எதிர்கொள்வோம் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2017 2:00 AM IST (Updated: 17 Feb 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

2018–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

2018–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–மந்திரி யார்?

கர்நாடகத்தில் 2018–ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலை எங்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தலைமையில் கீழ் எதிர்கொள்வோம். தனிப்பட்ட தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்கும் திட்டம் இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்–மந்திரி யார்? என்பது காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும். அந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்.

பொதுவாக எங்கள் கட்சியில் தேர்தலுக்கு முன்பாக முதல்–மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இல்லை. நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம். குமார் பங்காரப்பா அவருடைய தந்தை பங்காரப்பாவின் இடத்தை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த காரணத்திற்காக தான் காங்கிரஸ் கட்சி அவருக்கு மந்திரி பதவியை வழங்கியது. இப்போதும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அவருக்கு என்ன அதிருப்தி என்று எனக்கு தெரியவில்லை.

அரசியல் பிரச்சினையை...

குமார் பங்காரப்பா எங்கள் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளாரா? என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடன் அவர் விவாதித்தால் நான் அவருடைய அரசியல் பிரச்சினையை தீர்த்து வைப்பேன். பா.ஜனதா கட்சி பலமாக இருந்தால், காங்கிரஸ் கட்சியினரை எதற்காக அந்த கட்சியில் சேர்த்து கொள்கிறார்கள்?. பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும் என்று எடியூரப்பா சொல்கிறார். அந்த திட்டம் என்ன ஆனது?.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story