வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கு: கணவர், மாமனாருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமனாருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொள்ளேகால்,

வரதட்சணை கொடுமை
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா தெரக்கனாம்பி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குந்தகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஈசுவரப்பா. இவரது மகன் சிவசங்கரப்பா (வயது 30). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஜோதி(25) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது சிவசங்கரப்பாவுக்கு, ஜோதியின் வீட்டில் இருந்து தங்க நகைகள், பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து சில மாதங்களில் சிவசங்கரப்பாவும், அவரது தந்தை ஈசுவரப்பாவும் சேர்ந்து ஜோதியிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு தகராறு செய்து வந்தனர். ஆனால் கூடுதல் வரதட்சணை வாங்கி வர ஜோதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஜோதியை அவர்கள் 2 பேரும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்றும் சிவசங்கரப்பாவும், ஈசுவரப்பாவும் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு ஜோதியை துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜோதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில், கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கணவர் சிவசங்கரப்பாவும், மாமனார் ஈசுவரப்பாவும் கொடுமை செய்தனர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு அவர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ஜோதியை தற்கொலைக்கு தூண்டியதாக சிவசங்கரப்பாவையும், ஈசுவரப்பாவையும் கைது செய்தனர்.
தலா 4 ஆண்டுகள் சிறை
இந்த சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி நடந்தது. இது தொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி லட்சுமண் எப்.மலவள்ளி தீர்ப்பு வழங்கினார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து ஜோதியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கணவர் சிவசங்கரப்பாவுக்கும், மாமனார் ஈசுவரப்பாவுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story