கேளம்பாக்கம் அருகே தலையில் எடைக்கல்லை போட்டு பெண் படுகொலை கணவர் கைது
கேளம்பாக்கம் அருகே தலையில் எடைக்கல்லை போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர்,
கேளம்பாக்கம் அருகே தலையில் எடைக்கல்லை போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூரில் வசித்து வருபவர் மிச்சல்ராஜ் (வயது 30). வீட்டின் அருகே பழைய பொருட்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மரியரஞ்சிதம் என்ற ஜெயராணி (24). இவர்களுக்கு 2 மகன்கள மற்றும் 2 மகள்கள் உள்ளனர் இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். நேற்று முன்தினம் மாலை மிச்சல்ராஜ் கடையை பார்த்து கொள்ளும்படி மனைவியிடம் கூறினார். அப்போது மரியரஞ்சிதம் குழந்தையை பார்த்து கொள்ள வேண்டியுள்ளதால் கடையை கவனிக்க முடியாது என்று கணவரிடம் கூறினார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இரவு இருவரும் வீட்டில் தூங்கச்சென்றார். ஆத்திரத்தில் இருந்த மிச்சல்ராஜ் மனைவியை கொல்ல திட்டமிட்டார்.
கொலை
நள்ளிரவு 12 மணியளவில் கடையில் இருந்த 25 கிலோ எடைக்கல்லை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மரியரஞ்சிதத்தின் தலையில் போட்டார். இதில் மரியரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரியரஞ்சிதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மிச்சல்ராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story