கவர்னரை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை கவர்னரை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
மணல்மேடுகள்
புதுவை தேங்காய்த்திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் மணல்மேடுகள் உருவாகியுள்ளன.
இந்த முகத்துவாரத்தை தூர்வார மத்திய அரசின் நிறுவனத்துக்கு கவர்னர் ஆலோசனையின்பேரில் பணி வழங்கப்பட்டது. கவர்னரின் காலதாமதத்தால் மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே அமைச்சர் கந்தசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே மத்திய அரசின் நிறுவனத்தை சேர்ந்த மணல்வாரி கப்பல் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தது. ஆனால் அங்கு தூர்வாரும் பணி சரிவர நடைபெறவில்லை என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
கவர்னர் உத்தரவின்பேரில் மணல்வார வந்த கப்பல் மணலை வாராததால் தாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது காலதாமதமாகிறது என்றும், இதற்கு காரணமான கவர்னரை கண்டித்தும் புதுவை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதுவை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story