உலக திறனாய்வு திறன் கண்டறியும் தடகள தேர்வு போட்டி 400 மாணவ -மாணவிகள் பங்கேற்பு


உலக திறனாய்வு திறன் கண்டறியும் தடகள தேர்வு போட்டி 400 மாணவ -மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Feb 2017 2:53 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடந்த உலக திறனாய்வு திறன் கண்டறியும் தடகள தேர்வு போட்டிகளில் 400 மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.

ஈரோடு,

தடகள தேர்வு போட்டி

ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் 2016-2017-ம் ஆண்டுக்கான ஈரோடு கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வு திறன் கண்டறியும் தடகள தேர்வு போட்டிகள் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) பியூலா ஜேன் சுசிலா தொடங்கி வைத்தார். இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு நடந்தது. இந்த போட்டிகளில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிக்கூடங்களில் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் 400 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார் கள்.

சான்றிதழ் -பரிசு

அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் ஈரோடு மாவட்ட தடகள சங்க தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். விழாவில் பயிற்சியாளர்கள் லதா (கைப்பந்து), கண்மணி (தடகளம்), சத்தியா (கால்பந்து) மற்றும் மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

தேர்வு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவார்கள். 

Next Story