தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:00 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தஞ்சாவூர்,

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவி ஏற்றார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தஞ்சையில் ரெயில் நிலையம் அருகே மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமையில் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் தங்கப்பன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் விருத்தாசலம், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் என்ஜினீயர் சரவணன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி, நிர்வாகிகள் செந்தில்குமார், சுந்தரவடிவேல், ராஜா, சரவணன், ஹேமலதா, மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story