பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓசூர் மின்வாரிய அலுவலர் கைது
பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓசூர் மின்வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 35). இவர் தனது நிலத்தில் பூந்தோட்டம் அமைப்பதற்காக ஓசூர் சிப்காட் 1-ல் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார்.
மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று அந்த அலுவலகத்தில் மின்வாரிய வணிகப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் (39) கூறினார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகேஷ் இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை நேற்று மதியம் லோகேஷ், சரவணனிடம் கொடுத்தார்.
வணிகப்பிரிவு ஆய்வாளர் கைது
அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுகள் பஞ்சாட்சரம், முருகன், விஜயகுமார், முத்துராகவன், பிரபாகர் ஆகியோர் கொண்ட குழுவினர், வணிகப்பிரிவு ஆய்வாளர் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story