அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மின்வாரிய அலுவலகத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர்,
முற்றுகை போராட்டம்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையினர் நேற்று காலை பி.என்.ரோட்டில் உள்ள திருப்பூர் தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர ஒருங்கிணைப்பாளர் காஜா மைதீன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில், லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூலனூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அந்த பகுதிக்குட்பட்ட முத்து செல்வி என்பவர் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக ரூ.4 ஆயிரத்து 650 லஞ்சம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுபோல் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ராயபுரம் மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்காத காரணத்தால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
எனவே லஞ்சமாக பெற்ற பணத்தை உடனடியாக திரும்ப பெற்று தருவதுடன், உடனடியாக மின் இணைப்பு கோரியவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story