பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்குள் 4,666 கழிவறைகள் கட்டப்பட்டன


பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்குள் 4,666 கழிவறைகள் கட்டப்பட்டன
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்குள் 4,666 கழிவறைகள் கட்டப்பட்டன

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சார்பில், கழிவறையின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 48 மணி நேரத்துக்குள் 6 ஆயிரம் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டும் பணி கடந்த 13-ந்தேதி காலை 7 மணியளவில் தொடங்கியது. இதற்காக 121 ஊராட்சியிலும் சிமெண்டு செங்கல்கள், கழிவுநீர் கோப்பைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருந்தன. தொடர்ந்து கழிவறைகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கொத்தனார்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை 7 மணி வரை 48 மணி நேரத்துக்குள் மொத்தம் 4,666 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதில், பெரம்பலூர் ஒன்றியத்தில் 800 கழிவறைகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 1,100 கழிவறைகளும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 1,500 கழிவறைகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 1,266 கழிவறைகளும் கட்டப்பட்டு உள்ளன. மீதமுள்ள கழிவறைகளை கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முன்பு நிசாம்பாபாத்தில் 48 மணி நேரத்தில் 1,000 கழிவறைகள் கட்டப்பட்டதே சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் விதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கழிவறை கட்டும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 78,635 கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 46,166 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள கழிவறைகள் அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்தார். 

Next Story