பெரும்பாறை பகுதியில் வீடு, விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
பெரும்பாறை பகுதியில் வீடு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
பெரும்பாறை,
காட்டு யானைகள்
பருவமழை பொய்த்து போனதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனத்தில் இருந்து தண்ணீர், உணவை தேடி மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தநிலையில் பெரும்பாறை அருகே கவியக்காடு பகுதியில் உள்ள தோட்டங்களில் காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
வீடு, விவசாய பயிர்கள் சேதம்
கே.சி.பட்டி, ஆடலூர், மருமலை போன்ற பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் அந்த யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்குள்ள தோட்டங்களில் உள்ள முள்வேலி, சோலார் வேலி போன்றவைகளை உடைத்து விட்டு உள்ளே புகுந்து பயிர்களை நாசப்படுத்தின.தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள், பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கவியக்காடு குடியிருப்யை ஒட்டியுள்ள பொருந்தார் பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தின.
பின்னர் அங்குள்ள தோட்டத்து வீட்டை உடைத்து சேதப்படுத்தின. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இதுகுறித்து கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கன்னிவாடி வனச்சரகர் தெய்வசர்மா, தலைமையில் வனவர்கள் ராஜ், சரவணன் வனக்காப்பாளர் வேல்முருகன் ஆகியோர் சென்றனர்.
பின்னர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட சேதம் குறித்த பட்டியலை வனத்துறையினர் சேகரித்துள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story