முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து விழுப்புரம் மற்றும் மேல்மலையனூர் பகுதியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

விழுப்புரம்,

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

அதன்படி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நேற்று கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

இதில் மாவட்ட துணை தலைவர் அற்புதவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கமருதீன், முன்னாள் நகர செயலாளர் நூர்முகமது, இலக்கிய அணி செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தனுசு, முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் முத்துலட்சுமி தட்சிணாமூர்த்தி, நகரமன்ற முன்னாள் கவுன்சிலர்கள் செந்தாமரைக்கண்ணன், பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கண்டமானடி ராஜி, சிவா, ஊராட்சி செயலாளர் என்ஜினீயர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துலட்சுமி நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் பேரவை செயலாளர் பலராமன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர்கள் அய்யனாரப்பன், பாலபாஸ்கர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குமாரசாமி, மாவட்ட பேரவை துணைத்தலைவர் ரமேஷ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயக்கொடி ஏழுமலை, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் அசோக், வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேல்மலையனூர்

மேல்மலையனூர் மற்றும் அவலூர்பேட்டையில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள் பாலா, சிலாவுதீன், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் சற்குணம், பூங்காவனம், கிளை செயலாளர்கள் துறைக்கண்ணு, விஜயன், குமார், மீனவரணி ராமசந்திரன், சிறுபான்மைபிரிவு அயாத் மற்றும் பழனி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story