சாராயம் கடத்தி வந்த 2 பேர் பிடிபட்டனர் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
நாகையில் வாகன சோதனையின் போது சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் மேலப்பிடாகை பகுதியில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 55 லிட்டர் வெளிமாநில சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பொண்ணிரை பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது42), திருக்குவளை வட்டம் திருவாய்மூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (24) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வெளிமாநில சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் சாராயம் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
நாகை மதுவிலக்கு போலீசார் புத்தூர் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் 2 பேரும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் சோதனை செய்த போது அதில் 210 வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மது விலக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, ஏட்டுகள் சோழன், இளங்கோவடிகள் ஆகியோர் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுகடத்தி வந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story