ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் தடியடி நடந்த இடத்தில் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு
கோவையில், ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தடியடி நடந்த இடத்தை நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு செய்தார்.
கோவை,
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை அப்புறப்படுத்திய போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. சென்னையில் வன்முறை வெடித்து போலீஸ் நிலையத்துக்கு தீவைக்கப்பட்டது. இதே போல கோவையிலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
கோவையில் விசாரணை கமிஷன் நீதிபதி ஆய்வு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கடந்த 9-ந் தேதி சென்னையில் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு ஆய்வு நடத்துவதற்காக நேற்று கோவை வந்த அவர் போராட்டம் நடந்த வ.உ.சி.மைதானத்தை பார்வையிட்டார். அதன்பிறகு கொடிசியா மைதானம், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடைபெற்ற காந்திபுரம் கிராஸ்கட் சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், அவினாசி சாலை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள் எவை? தகராறு நடந்தது எப்படி? தடியடி நடந்தது ஏன்? என்பது பற்றி கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, நீதிபதி ராஜேஸ்வரனுக்கு விளக்கி கூறினார். அவற்றை நீதிபதி ராஜேஸ்வரன் பதிவு செய்து கொண்டார்.
நேரில் கருத்து தெரிவிக்கலாம்
அதன்பின்னர் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த மாதம் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு கலவரத்தின்போது ஏற்பட்ட தகராறில் நகரின் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வு நடத்த நான் வந்துள்ளேன். இது முதற்கட்ட ஆய்வு தான். கடந்த 9-ந் தேதி சென்னையில் ஆய்வு நடத்திய பின்னர் இன்று(16-ந் தேதி) கோவை வந்துள்ளேன். இன்று மதியம் சேலத்திலும் நாளை (இன்று) மதுரையிலும் ஆய்வு நடத்த உள்ளேன். இந்த கலவரம் எப்படி ஏற்பட்டது? என்பன போன்ற விவரங்களை போலீசார் விளக்கினார்கள். அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். இதற்காக போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவேன் என்று நீங்கள் நினைக்க கூடாது.
அடுத்து 2-வது கட்டமாக விசாரணை நடத்தப்படும். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் என் முன்னால் ஆஜராகி தங்கள் கருத்துகளை பயமின்றி தெரிவிக்கலாம். அந்த விசாரணை கோவையில் எப்போது? எங்கே நடத்தப்படும்? என்பது பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். 2-வது கட்ட ஆய்வு அந்தந்த ஊர்களில் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story