2–வது நாளாக கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
நேற்று 2–வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி,
கடல் சீற்றம்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்த காற்று காரணமாக நாகர்கோவில் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் நேற்று 2–வது நாளாக சூறாவளி காற்று வீசியதால், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
படகு போக்குவரத்து ரத்து
இதன் காரணமாக நேற்று 2–வது நாளாக விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்களது நாட்டுப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
குளச்சல்
குளச்சல் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் குளச்சல் கடல்பகுதி மற்றும் கேரள கடல் பகுதிகளில் ஆழ்கடலில் 12 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து வருவார்கள். சிலருக்கு அதிகமான மீன் கிடைத்தால் 5 நாட்களிலும் கூட அவர்கள் கரைக்கு திரும்பி விடுவார்கள்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மீன்கள் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் சூறைக்காற்று அதிமாக வீசிய காரணத்தினால் அவசரமாக கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள், விசைப்படகுகளை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர்.
அவசரமாக கரை திரும்பிய விசைப்படகுகளில் வளம், நவரை போன்ற சாதாரண மீன்கள் குறைந்த அளவே கிடைத்து இருந்தன. இதனால் மீனவர்கள் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டனர்.

Next Story