ஆவடியில் மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் புதிதாக தனியார் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கட்டிடத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.
ஆவடி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ஏழுமலை (வயது 45) என்பவரும் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் முதல் மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ஏழுமலை, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story