கவர்னர் மாளிகை முன்பு தற்கொலை போராட்டம் நடத்த வந்த விவசாய சங்கத்தினர் கைது


கவர்னர் மாளிகை முன்பு தற்கொலை போராட்டம் நடத்த வந்த விவசாய சங்கத்தினர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2017 3:13 AM IST (Updated: 17 Feb 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

தாம்பரம்

திருச்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில், முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் அல்லது கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கோரி நேற்று கவர்னர் மாளிகை முன்பு தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி வந்தனர். அவர்கள் தாம்பரம் ரெயில் நிலையம் வந்து இறங்கி மின்சார ரெயில் மூலம் கிண்டி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

தாம்பரம் வந்த அவர்களை தாம்பரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Next Story