வடபழனி வள்ளி திருமண மண்டபத்தில் கோவில் பிரசாத பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் உள்ள அன்னதானக்கூடம் மற்றும் பிரசாதக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை,
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னதானக்கூடம் மற்றும் பிரசாத கடைகளில் வழங்கப்படும் பிரசாதங்கள், உணவு வகைகள் சுத்தம், பாதுகாப்பு மற்றும் தரமானதாக தயாரிப்பதற்கான சிறப்பு பயிற்சி சென்னை வடபழனி வள்ளி திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்துதல் ஆணையம் மற்றும் அதனுடைய தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் இப்பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சி முகாமானது இன்றுடன் முடிவடைகிறது.
இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் உள்ள அன்னதானக்கூடம் மற்றும் பிரசாதக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை செயலாளர் அமுதா, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மா.வீரசண்முகமணி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய இயக்குனர் டாக்டர் சுனிதி டோட்ஜா, கூடுதல் கமிஷனர் டாக்டர் வனஜா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ந.திருமகள், இணை கமிஷனர் அ.தி.பரஞ்ஜோதி, பயிற்சி அதிகாரி டாக்டர் கவிதா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story