அஞ்சல்துறை ஆயுள் காப்பீடு முகவருக்கான நேர்காணல் சென்னையில் 20-ந்தேதி நடக்கிறது


அஞ்சல்துறை ஆயுள் காப்பீடு முகவருக்கான நேர்காணல் சென்னையில் 20-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 17 Feb 2017 3:21 AM IST (Updated: 17 Feb 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்களை நியமிப்பதற்கான நேர்காணலை அஞ்சல்துறை நடத்தி வருகிறது.

சென்னை,

அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்களை நியமிப்பதற்கான நேர்காணலை அஞ்சல்துறை நடத்தி வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது முதல் 60 வயதுடைய வேலையில்லாதோர், சுயதொழில் செய்யும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேர்காணலில் தங்கள் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி மேற்கொண்டவர்கள், தங்கள் வசிக்கும் பகுதி பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நேர்காணல் 20-ந்தேதி காலை 11 மணிக்கு எண்.107, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை-600017 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (சென்னை தெற்கு கோட்டம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பிற காப்பீடு நிறுவனங்களில் ஆயுள் காப்பீடு வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பத்திரிகை தகவல் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

Next Story