காமக்கூர் ஆற்றுப்படுக்கைகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் பாலம் அபாயமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்
ஆரணியை அடுத்த காமக்கூர் ஊராட்சியில் இருந்து குண்ணத்தூர் செல்வதற்காக ஆற்றுபாதை இருற்து வந்துள்ளது.
ஆரணி,
ஆரணியை அடுத்த காமக்கூர் ஊராட்சியில் இருந்து குண்ணத்தூர் செல்வதற்காக ஆற்றுபாதை இருற்து வந்துள்ளது. அதை சுமார் ரூபாய் 7கோடி மதிப்பில் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. அந்த ஆற்றுப்பாலம் அடியில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக திருட்டுமணல் அள்ளப்படுவதாகவும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் திருட்டுகும்பல் ஆற்றுப்படுக்கைகளிலும், மணல் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து கிராமமக்கள் தாசில்தார் மு.தமிழ்மணியிடம் புகார் அளித்தனர். வருவாய் ஆய்வாளர் சரவன், கிராம அலுவலர் விஜயா ஆகியோர் ஆற்றுப்படுக்கை பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் கூறுகையில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த ஆற்று பகுதிகளில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தபட்டவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.