இ–சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யலாம்


இ–சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யலாம்
x
தினத்தந்தி 18 Feb 2017 1:30 AM IST (Updated: 17 Feb 2017 11:44 PM IST)
t-max-icont-min-icon

இ–சேவை மையங்கள் மூலம் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

இ–சேவை மையங்கள் மூலம் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி–மக்கள் தொடர்பு துறை அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

இ–சேவை மையங்கள்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் இ–சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இ–சேவை மையங்கள் தலைமை செயலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த இ–சேவை மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள், தங்களது ஆதார் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் திருத்தம் செய்யும் வசதி, கடந்த 10–ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

திருத்தம் செய்யலாம்

எனவே பொதுமக்கள் இந்த இ–சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து, தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் போட்டோ ஆகிய விவரங்களில் ஏதாவது பிழை இருந்தால், திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story