களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி 28–ம் தேதி தொடக்கம்
களக்காடு புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு தோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி வருகிற 28–ம் தேதி தொடங்குகிறது.
களக்காடு,
களக்காடு புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு தோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி வருகிற 28–ம் தேதி தொடங்குகிறது. களக்காடு, திருக்குறுங்குடி, மேல் கோதையாறு ஆகிய சரகங்களில் இப்பணிகள் நடக்கின்றன.
மார்ச் 5–ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. இந்த பணியில் கலந்து கொள்ளும் வனத்துறை ஊழியர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு 25–ம் தேதி, 27–ம் தேதிகளில் பாபநாசத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதனைதொடர்ந்து 28–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரிப்பது, அவைகளை நேரில் காண்பது மூலம் கணக்கெடுப்பு பணி நடக்கிறது என்று களக்காடு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story