விவசாயிகள், நிவாரண தொகை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் அறிவிப்பு
விவசாயிகள், நிவாரண தொகை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
விவசாயிகள், நிவாரண தொகை பெற மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது;–
நிவாரண தொகைமாவட்டத்தில் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறையினர் மூலம், பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையானது அவர்களின் வங்கி கணக்கில் மின்னணு பரிமாற்ற முறையில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்ற முறையில் நிவாரண தொகை வரவு வைக்க இயலாது.
வங்கி கணக்குஎனவே, கணக்கெடுப்பின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ள விவசாயிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிதாக குறைந்தபட்ச தொகையில்லா வங்கி கணக்கையோ அல்லது அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கியோ அதன் விவரத்தை, விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
சிறப்பு ஏற்பாடுமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு வங்கி கணக்குகள் எளிமையாக தொடங்கிட தேவையான அறிவுரைகள், அந்த கூட்டுறவு வங்கி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வங்கி கணக்குகளை உடன் தொடங்கி விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.