சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் ஆய்வு


சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2017 3:00 AM IST (Updated: 18 Feb 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

5-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அனுமதி வழங்குவதற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.

அரசு மருத்துவக்கல்லூரி

சிவகங்கையில், தமிழக அரசு சார்பில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் போதுமான வசதிகள் உள்ளதா என்பதை ஒவ்வொரு ஆண்டும் இந்திய மருத்துவக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கி வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது.

5-வது ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அனுமதி வழங்குவதற்காக இந்திய மருத்துவக்கழக போராசிரியர்கள் ஜோசி, ராஜன்பட்டேல் ஆகியோர் நேற்று கல்லூரியை ஆய்வு செய்தனர்.

கல்லூரியில் போதுமான இடவசதி உள்ளதா, மாணவர்களுக்கு தேவையான ஆய்வக வசதி, மருத்துவ உபகரணங்கள் உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டனர்.

அனுமதி அளிக்கும்

இந்த குழுவினர் தங்கள் ஆய்வு அறிக்கையை, இந்திய மருத்துவக் கழகத்திற்கு அளிக்க உள்ளனர். அதன்பின்னர் தான் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படிப்பை தொடர இந்திய மருத்துவக்கழகம் அனுமதி அளிக்கும்.

முன்னதாக ஆய்வு செய்ய வந்த இந்திய மருத்துவக்கழக பேராசிரியர்களை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜன், துணை முதல்வர் சுசிலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மகேஸ்வரி, மருத்துவ அலுவலர் டாக்டர் குழந்தை ஆனந்தன் ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து விளக்கி கூறினர். 

Next Story