ஜல்லிக்கட்டு போட்டியை அமைதியாக நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
போடியை அடுத்த அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைதியாக நடத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
போடிநாயக்கனூரை அடுத்த அய்யம்பட்டியில் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாளை ஜல்லிக்கட்டு
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் ஊரில் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் உள்ளோம். பிற்பட்ட வகுப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வசிக்கிறார்கள். இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள எங்களை அனுமதிப்பதில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 19-ந்தேதி (நாளை) எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில் எங்களை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதற்காக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை கேட்டு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு கொடுத்தோம். இதுவரை பதில் வரவில்லை. எனவே இந்த ஆண்டும், இனிவரும் காலங்களிலும் எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பொது விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அமைதி பேச்சுவார்த்தை
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு வக்கீல், “மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அந்த கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கிராமத்தின் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர். இறுதியில், ஜல்லிக்கட்டு விழாவில் உள்ளூர்க்காரர்கள் யாரும் மாடு பிடிப்பதில்லை என்றும், மற்ற ஊர்களை சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் மாடு பிடிக்கலாம். எல்லோருடைய மாடுகளும் கலந்து கொள்ளவும் தடை ஏற்படுத்தக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்” என்றார்.
பின்னர் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான அறிக்கை நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உத்தமபாளையம் வருவாய் அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் செய்ய வேண்டும். விழா நடந்து முடிந்தது தொடர்பான அறிக்கையை வருகிற 22-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Next Story