நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் குடித்தார்


நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் குடித்தார்
x
தினத்தந்தி 18 Feb 2017 3:15 AM IST (Updated: 18 Feb 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சுய உதவிக்குழுவில் கடன்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி சுமதி (வயது42). இவர் திருவாரூரில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றார். கடனை மாதத்தவணையாக ரூ.1,860-ஐ திரும்பி செலுத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 3 தவணைகளை சுமதி கட்டத்தவறியதாக தெரிகிறது. தவணைத்தொகை கட்டாததால் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்கள் வீட்டில் வந்து சுமதியிடம் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் சுமதி மனவேதனையில் இருந்தார். இதையடுத்து நேற்று சுமதி நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

தீவிர சிகிச்சை

கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு சுமதி குளிர்பானத்தில் பூச்சி மருந்தை(விஷம்) கலந்து மறைத்து எடுத்து வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் சுமதி தான் வைத்திருந்த பூச்சிமருந்து கலந்த குளிர் பானத்தை குடித்து மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் மயங்கி விழுந்த அவரை உடனே கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மீட்டு தாசில்தார் ஜீப்பில் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story