சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் ஆய்வு
தெத்தி ஊராட்சியில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினை கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
அகற்றும் பணி
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. அதைதொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி நாகையை அடுத்த தெத்தி ஊராட்சி பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதிக்குள் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின் போது தாசில்தார் தமிமுன் அன்சாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முருகேசன், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி தாளாளர் பரமேஸ்வரன், அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேதாரண்யம்
இதேபோல வேதாரண்யம் தாலுகா கடினல்வயல் ஊராட்சியில் கீழக்காடு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியஆணையர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், ஒன்றிய பணி பார்வையாளர் நாகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மேனகா, ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் குமார் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து ராதாமங்கலம் ஊராட்சி பொதுமக்களுக்கு சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கீழ்வேளூரில் உள்ள பிரைம் கல்வி நிறுவன வளாகத்தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணி மாணவர்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் நடைபெற்றது.

Next Story