ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு
ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு
திருவாரூர்,
திருவாரூர் அருகே ஜாமீனில் வெளியில் வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
தலைமறைவு
திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பொய்யாமொழி (வயது 50). இவர் உள்ளிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு கீழத்திருப்பாலக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பரவாக்கோட்டை போலீசார் பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் பொய்யாமொழி ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால் கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்தபோது பொய்யாமொழி ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து திருவாரூர் அமர்வு கோர்ட்டு பொய்யாமொழிக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பொய்யாமொழி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். கோர்ட்டு உத்தரவை மீறி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ள காரணத்தினால் பரவாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரியா, பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.

Next Story