மின்சார தொழில் நுட்பத்துக்கு மாறிவரும் பவுண்டரி ஆலைகள்
நிலக்கரி விலை உயர்வால் கோவையில் மின்சார தொழில்நுட்பத்திற்கு பவுண்டரி ஆலைகள் மாறி வருகின்றன.
பவுண்டரி ஆலைகள்
கோவையில் மோட்டார் பம்பு செட், ஆட்டோ மொபைல், என்ஜினீயரிங், ஜவுளி எந்திரங்கள், நூற்பாலை எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்துறைகளின் எந்திரங்கள், உதிரிபாகங்கள் உற்பத்திக்கும் பவுண்டரி என்கிற வார்ப்பட தொழில் முதுகெலும்பாக விளங்குகிறது. எந்திரங்களுக்கு தேவையான வார்ப்பு இரும்பை உருக்கி, தேவையான வடிவமைப்புகளாக மாற்றித் தரும் பணியை வார்ப்பட (பவுண்டரி) தொழிற் சாலைகள் தான் செய்து கொடுக் கின்றன.
கோவையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே வார்ப்பட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அப்போது 50 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 400 சிறு, குறு பவுண்டரிகள், 150 நடுத்தர பவுண்டரிகள், 50 பெரிய பவுண்டரி ஆலைகள் உள்ளன.
இது குறித்து பவுண்டரி தொழில் துறை யினர் சிலர் கூறியதாவது:-
முதலீடு
தொடக்க காலத்தில் குப்பலோ (நிலக்கரி மூலம் இயங்கும்) முறையில் பவுண்டரி ஆலைகள் இயக்கப் பட்டன. அதற்கு அதிகளவில் நிலக்கரி தேவைப்படும். இந்த ஆலைகளுக்கு தேவையான நிலக்கிரி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.21 ஆக இருந்த நிலக்கரி விலை தற்போது ரூ.28-ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து விடுகிறது. கட்டுப்படியாவது இல்லை. இதனால் ஆலைகளை மின்சாரத்தில் இயங்கும் (இன்டக்ஸ்டன் பர்னர்) தொழில்நுட்பத்தில் மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 100 ஆலைகள் இன்டக்ஸ்டன் பர்னர் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. நிலக்கரி முறையில் இயங்கும் ஆலைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.2½ லட்சம் முதலீடு போதுமானது.
தரமான பொருட்கள்
மின்சார தொழில்நுட்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் செலவாகிறது. இருந்த போதிலும் மின்சார தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் உற்பத்தி பொருட்கள் தரமானதாக உள்ளன. இதன் மூலம் தான் போட்டிகளை எதிர்கொள்ள முடிகிறது.
இதனால் மின்சார தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. கோவையை பொறுத்தவரை பவுண்டரிகளுக்கு என்று தனியாக தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்படு கிறது.
இந்த தொழிலை நம்பி நேரடியாக, மறைமுகமாக மொத்தம் 4½ லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டு களில் குஜராத், கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பவுண்டரி தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவை கோவை தொழிற்துறையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது உண்மை தான்.
50 ஆயிரம் டன் உற்பத்தி
ஆனாலும் கோவையில் உற்பத்தி யாகும் வார்ப்பட பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் விற்பனை மையங்களாக செயல்படும் வடமாநிலங்களில் உள்ள ஆட்டோமொபைல், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலம் ஆடர்கள் அதிகரித்துள்ளன.
கோவையில் உள்ள பவுண்டரி ஆலைகள் மூலம் மாதத்துக்கு 50 ஆயிரம் டன் அளவில் உதிரிபாகங்கள், பொருட்கள் உற்பத்தியாகின்றன. இதில் பெருமளவு மோட்டார் பம்பு, ஆட்டோ மொபைல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படு கிறது.
தற்போது பணத்தட்டுப்பாடு பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்து உள்ளது. இதனால் பவுண்டரி ஆலைகளில் உற்பத்தி முடக்கம் இல்லாமல் தொடர்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து பவுண்டரி ஆலைகளுக்கு பம்புசெட்டு தயரிப்பு நிறுவனங்கள் மூலம் கூடுதல் ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story