கோத்தகிரி அருகே அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு
கோத்தகிரி அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு
கோத்தகிரி தாலுகாவுக்குட்பட்ட ஜெகதளா ஊராட்சி பெட்டட்டி பகுதியில் இருந்து பந்துமை செல்லும் பகுதியில் உள்ள ஓடையை விவசாயி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அரசுக்கு சொந்தமான நிலத்தில் கேரட் விவசாயம் செய்து வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவர் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து புகார் செய்ததுடன், அந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கடந்த 9-ந் தேதி சம்பந்தப்பட்ட விவசாயிக்கு 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நோட்டீசு அனுப்பினர்.
நிலம் மீட்பு
ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த காரணத்தால் கலெக்டர் சங்கரின் உத்தரவின் பேரில் குன்னூர் ஆர்.டி.ஓ மேற்பார்வையில் கோத்தகிரி தாசில்தார் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நில அளவை மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயி ஒருவர் ஓடையை ஆக்கிரமித்து அரசுக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் அந்த நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். பின்னர் அந்த நிலத்தில் வேலி அமைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Next Story