குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்
கடற்கரை கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ கூறினார்.
காரசார விவாதம்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமை தாங்கி, மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கடற்கரை கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சைமன் காலனி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் குடிநீர் உப்பாக மாறியுள்ளது. சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் உப்பாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் குடிநீர் உப்பாக மாறியிருப்பதை ஆதாரப்பூர்வமாக காண்பிக்கும் வகையில் மீனவர்கள் சிலர் ஒரு பாட்டிலில் அந்த தண்ணீரை பிடித்து கொண்டு வந்து, அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் பலரும் பேசினர். இதனால் சிறிது நேரம் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மணல் மூடைகள்
குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களுக்கு குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தேங்காப்பட்டணம் பகுதியில் கடல்நீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரில் உப்புச்சுவை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கடல் நீர் ஆற்றுநீருடன் கலக்காமல் இருக்க தற்காலிக ஏற்பாடாக மங்காடு பாலம் அருகே 3 மீட்டர் உயரத்தில் மணல் மூடைகளை அடுக்கி நீர்புகாமல் தடுக்கப்படும். அதன்பிறகு குடிநீரில் உப்புத்தன்மை குறையும். மேலும் கடல் நீர் உட்புகுவதை நிரந்தரமாக தடுக்க தடுப்பு அணை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
முன்னுரிமை
மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ பேசும்போது, “குமரி மாவட்டத்தில் பருவமழை பெய்யும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கிவிடும். அதற்கு முன்பு கடற்கரை கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள குழாய்களை பராமரித்து செயல்பட வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். கூட்டத்தில் கடந்த (ஜனவரி) மாதத்தில் மீனவ மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைவாரியான பதில்கள் வாசிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
குமரி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை முன்னிட்டு குடிநீர் சம்பந்தமான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முட்டம் ஊராட்சி பகுதியினை சுற்றுலா மையமாக மேம்பாடு செய்யும் பொருட்டு மத்திய அரசு மூலம் தற்போது ரூ.65 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடற்கரை பகுதியில் தடுப்பு வேலி அமைக்கவும், கழிவறைகள் பராமரிக்கவும் ஊராட்சி மூலம் செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ராமர் என்ற வைகைகுளம் மற்றும் நீலகண்டபிள்ளை பெரிய குளம் ஆகியவற்றின் மீன்பிடி குத்தகை உரிமை தோவாளை தாலுகா உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு மூலமாக சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி குளங்களில் பிரச்சினை இன்றி சங்க உறுப்பினர் அனைவரும் மீன்பிடிப்பது தொடர்பாக சங்க நிர்வாகக்குழு மூலமாக கூடி முடிவெடுக்குமாறு தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் நாபிராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மீனவர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story